August 10, 2026

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்ய மறுப்பு: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை: டெல்டா மாவட்​டங்​களில் நெல் கொள்​முதல் செய்ய அலு​வலர்​கள் மறுப்​ப​தாக அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன் குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தஞ்​சாவூர், திரு​வாரூர் உள்​ளிட்ட காவிரி டெல்டா மாவட்​டங்​களில் உள்ள நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் லட்​சக்​கணக்​கான நெல் மூட்​டைகள் கொள்​முதல் செய்​யப்​ப​டா​மல் கிடப்​பில் போட்டு வைக்கப்பட்டுள்ளது.

இவ்​வாறு காலம் தாழ்த்​து​வது, அவ்​வப்​போது பெய்​யும் மழை​யில் நெல் மூட்​டைகள் நனைந்து வீணாவதற்கு அடிப்​படை காரண​மாகஉள்​ளது.

நெல் மூட்​டைகளை கிடங்​கு​களுக்கு ஏற்​றிச் செல்ல வாக​னங்​கள் இல்லை எனக்​கூறி விவ​சா​யிகளை அலைக்​கழித்​து, நெல் கொள்​முதல் செய்​வ​தில் காட்​டும் அலட்​சி​யம் கடும் கண்​டனத்​துக்​குரியது.

காவிரி டெல்டா மாவட்​டங்​களில் நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் தேங்​கிக் கிடக்​கும் நெல் மூட்​டைகள் அனைத்​தை​யும் உடனடி​யாக கொள்​முதல் செய்​ய வேண்டும். இவ்​​வாறு அவர்​ கூறியுள்​ளார்​.

Spread the love