சோழவந்தான் மார்ச் 31
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெரு அருள்மிகு உச்சிமா காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு வந்தது திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை காலை வைகை ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் பால்குட ஊர்வலம் எடுத்து சோழவந்தான் 4 ரத வீதிகளில் வலம் வந்து ஜெனகைமாரியம்மன் கோவிலை அடைந்து பின்பு உச்சிமாகாளி அம்மன் கோவிலை அடைந்தனர் மேளதாளம் அதிர்வேட்டுக்கள் முழங்க பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஏற்பாடுகளை எம்வி எம் குழும தலைவர் மணி முத்தையா, எம் வி எம் கலைவாணி பள்ளி தாளாளர் மருது பாண்டியன் நிர்வாகி வள்ளி மயில் மற்றும் பூமேட்டு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

More Stories
தமிழக ஆளுநர் நாளை சென்னை வருகை: அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 19 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடப்பட்ட புகைப்படம்
திருப்பூர்