வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பும் வசதி உலகளவில் அறிமுகமாகிறது. தனிநபர் மற்றும் குழு உரையாடல்களில், 10 நிமிடங்கள் முதல் 14 நாட்கள் வரை முன்கூட்டியே செய்தியைத் திட்டமிடலாம். அனுப்பும் பொத்தானை அழுத்திப் பிடித்து, தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்தால் போதும்.
எழுத்துச் செய்திகள் மட்டுமின்றி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் திட்டமிட்டு அனுப்பலாம். அனுப்புநரின் போன் அணைக்கப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் செய்தி சென்றடையும். இந்த வசதி உலகளவில் படிப்படியாக வெளியிடப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

More Stories
3 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் உயர்தர உணவு அறிமுகம்
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை – இன்றைய சந்தை நிலவரம் என்ன?
இரண்டு நாள் சிறிய ஏற்றத்துக்குப் பின் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,360 குறைந்தது