ஜோலார்பேட்டை, ஜூலை.10
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏ ஆர் தங்கக்கோட்டையில் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு உரிமையாளர்கள் சங்க தலைவர் பீட்டர் தலைமையில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் துணைத் தலைவர் கிறிஸ்துராஜ் பொருளாளர் கவியரசன் ஏ ஆர் தங்க கோட்டை உரிமையாளர் ஏ ஆர் ராமமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.
ஏலகிரி மலையில் 150 க்கு மேற்பட்ட ஹோட்டல்கள் 200க்கும் மேற்பட்ட கெஸ்ட் ஹவுஸ்கள் செயல்பட்டு வருகின்றன வாரத்திற்கு குறைந்த பட்சம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி
எழில்மிகு ஏலகிரி மலையை சுற்றுலா தளத்தை மேம்படுத்த பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்தனர்.
1.ஏலகிரிமலை படகு இல்லம் சுற்றி நடைபாதை அமைக்க வேண்டும் 2.ஏலகிரி மலையில் 24 மணி நேரமும் மருத்துவ சேவையை உறுதிப்படுத்த வேண்டும்
3.மினி ஆம்புலன்ஸ் அமைத்து தர வேண்டும் 4.ஏலகிரி மலைக்கு மினி பேருந்து இயக்கப்பட வேண்டும் 5.ஏலகிரி மலை சாலைகளை மேம்படுத்த வேண்டும் 6.சுற்றுலா வரைபடங்களில் ஏலகிரி மலை விடுபட்டுள்ளதை பதிவேற்றம் செய்து சுற்றுலாத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் 7.மேலும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் 8.வேலூர் இருந்து திருப்பத்தூர் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் பொன்னேரியில் நின்று செல்ல வேண்டும் 9.சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு தனி அரசு பேருந்து இயக்கப்பட வேண்டும். 10. ஏலகிரி மலையில் கடந்த எட்டு வருடங்களாக கோடை விழா நடைபெறவில்லை ஆகவே ஏலகிரி மலை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வருட வருடம் கோடை விழா நடைபெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

More Stories
25-08-2026
25-08-2026
திருப்பூர்