ராமநாதபுரத்தில் டாக்டர் இ. எம். அப்துல்லா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நேஷனல் அகாடமி பள்ளிகள் சார்பில் புதிய கட்டிடத் மற்றும் புகைப்படக் கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது.

புதிய கட்டிடத்தைப் பேராசிரியர் டாக்டர் சாலிக் மற்றும் கண்காட்சியை டாக்டர் பாபு அப்துல்லா திறந்து வைத்தனர். கண்காட்சியில், டாக்டர் இ. எம். அப்துல்லா வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நவீன ஆடியோ, வீடியோ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்விழாவை நேஷனல் அகாடமி பள்ளிகளின் தாளாளர் டாக்டர் செய்யதா அப்துல்லா, முனைவர் சங்கரலிங்கம் மற்றும் பள்ளி முதல்வர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்கள், கல்விக் குழும அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் டாக்டர் இ. எம். அப்துல்லா அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
காஞ்சிரங்குடி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கரூர்
13-10-2026