சென்னை: டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்ய அலுவலர்கள் மறுப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காலம் தாழ்த்துவது, அவ்வப்போது பெய்யும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதற்கு அடிப்படை காரணமாகஉள்ளது.
நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்ல வாகனங்கள் இல்லை எனக்கூறி விவசாயிகளை அலைக்கழித்து, நெல் கொள்முதல் செய்வதில் காட்டும் அலட்சியம் கடும் கண்டனத்துக்குரியது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More Stories
வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இல்லை; ஏமாற்றம்தான் அதிகமாக உள்ளது: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் முற்றிலும் வறண்டு கிடக்கும் சாத்தையாறு அணை..! 2,000 ஏக்கர் விவசாயம் பாதிப்பு…
நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்வு குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு!