திண்டல் வேளாளர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் மார்ச் 2026 +2 பொதுத் தேர்வை 372 மாணவியர் எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். ர. இலக்கியா 596/600 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும் மாநில அளவில் மூன்றாமிடமும் மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பெற்றுள்ளார். மோ. மேகவர்ஷினி 590/600 மதிப்பெண்களும் க.ச. வைசவி 588/600 மதிப்பெண்களும் பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர். உயிரியல், வேதியியல், கணக்குப்பதிவியல், பொருளியல், வணிகவியல், கணிணி அறிவியல் மற்றும் கணிணிப் பயன்பாடுகள் பாடங்களில் 82 மாணவியர் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். +2 பொதுத் தேர்வில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவியரைப் பள்ளியின் தாளாளர் திரு எஸ்.டி. சந்திரசேகர், நிர்வாகிகள் திரு சி. பாலசுப்ரமணியம், திரு எம். யுவராஜா, நிர்வாகக் குழு உறுப்பினர்கள், முதல்வர் செல்வி வெ. லதா, நிர்வாக அதிகாரி திரு எல். சென்னியப்பன் மற்றும் ஆசிரியைகள் பாராட்டிக் கௌரவித்தனர்.
திண்டல் வேளாளர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் மார்ச் 2026

More Stories
பழனியில் ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்குவதால் போக்குவரத்து மாற்றம்
நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு?
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக பதவி ஏற்றதை முன்னிட்டுசிறப்பு அர்ச்சனை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடிய நிர்வாகிகள்