பழனி மே 12
பழனியில் புது தாராபுரம் சாலை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் ரூ 69 கோடியில் பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். அதன்படி ராமகிருஷ்ணா ஹாஸ்டல் முதல் கலிக்க நாயக்கன்பட்டி பிரிவு வரை. 17 தூண்கள் உடன் 745 மீட்டர் நீளத்தில் 17.2 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்பட உள்ளது. அதற்காக கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய பாலம் கட்டப்பட உள்ளதால், பழனி தாராபுரம் சாலையின் இருபுறங்களிலும் இருந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கப் பட உள்ளது. இந்த நிலையில் பழனி நகரில் வரும் மே 15 ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி பழனி ரெண காளியம்மன் கோயில் நால்ரோடு பகுதியில் இருந்து டிஎஸ்பி கேம்ப் வரை பணிகள் நடக்க உள்ளதால், அப்போது வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. ஆகவே பழனியில் இருந்து தொப்பம்பட்டி மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் பாலாஜி ரவுண்டானா அலங்கியம் ரோடு மானூர் பைபாஸ் பிரிவு சென்று, அங்கிருந்து திண்டுக்கல் பொள்ளாச்சி நான்கு வழி சாலை மால்குடி சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். மேலும் அதே மார்க்கத்தில் தான் தொப்பம்பட்டியில் இருந்து பழனி வரும் பஸ்கள் கனரக வாகனங்கள் பயணிக்க வேண்டும். அதேபோல் பழனியில் இருந்து ஜவகர் நகர் கலிக்க நாயக்கன்பட்டிக்கு செல்லும் இலகு ரக வாகனங்கள் அலங்கியம் ரோடு கோதைமங்கலம் சென்று அங்கிருந்து வலபுரம் திரும்பி புது தாராபுரம் சாலையில் செல்ல வேண்டும். அதேபோல்
ஜவகர் நகர் தொப்பம்பட்டியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கலிக்கநாயக்கன்பட்டி சாலை புதுநகர் சங்கிலிக்கேட் திருவள்ளுவர் ரோடு வழியாக பழனிக்கு வர வேண்டும். மேலும் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தயம் மார்க்கமாக வரும் வாகனங்கள் மாட்டுப் பாதை ஆயக்குடி வழியாக பழனிக்கு வர வேண்டும். உடுமலை மார்க்கத்தில் இருந்து பழனி வரும் வாகனங்கள் தாழையுத்து சின்ன கலையம்புத்தூர் வழியாக பழனி வரவேண்டும். இந்த தகவலை பழனி போலீஸ் டிஎஸ்பி தனஞ்செயன் கூறியுள்ளார்.

More Stories
திண்டல் வேளாளர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் மார்ச் 2026
நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு?
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக பதவி ஏற்றதை முன்னிட்டுசிறப்பு அர்ச்சனை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடிய நிர்வாகிகள்