July 28, 2026

தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது. பிறகு கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று முன் தினம், 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,300க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து வார தொடக்கமான இன்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,185க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 240க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Spread the love