March 26, 2026

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்வு; வெள்ளி மாற்றமின்றி விற்பனை

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று (மார்ச் 26) பவுனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. இருப்பினும் வெள்ளி விலையில் மாற்றமில்லை.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் மற்றும் சர்வதேச பொருளாதாரச் சூழல், வட்டி விகிதங்களை குறைக்க போவதில்லை என்ற அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பு போன்ற காரணங்களால், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தங்கம் விலை குறைந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 8,800-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.350 உயர்ந்து, ரூ.13,600-க்கு விற்கப்பட்டது. 

தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,670-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,09,360-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.260-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது.

Spread the love