
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்.7) பவுனுக்கு ரூ.1,360 என விலை அதிகரித்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.5,000 என அதிகரித்துள்ளது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தைகளின் முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று காலை பவுனுக்கு ரூ.1,600 என விலை குறைந்தது. இருப்பினும் நேற்று மாலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,040 என மீண்டும் உயர்ந்தது.
இந்த சூழலில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.7) காலை வர்த்தகம் தொடங்கியதும் கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,420-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,15,360-க்கு விற்பனை ஆகிறது.
இதேபோல 24 காரட் சுத்த தங்கம் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,25,848-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.98,800-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.285-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ரூ.2,85,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது. பிளாட்டினம் விலை கிராமுக்கு ரூ.445 என விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,111-க்கு விற்பனையாகிறது.

More Stories
“இப்படிப்பட்ட காஷ்மீரை கற்பனை செய்து கூட பார்க்கவில்லை” – முன்னாள் ராணுவ அதிகாரியின் வீடியோ வைரல்
இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை ஒருபோதும் ஹிந்துக்களை மிஞ்சாது: ஓவைசி
விமானங்களின் தரப் பரிசோதனை: 754-ல் கோளாறானவை 377 – மத்திய அரசு தகவல்