April 27, 2026

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று காலை பவுனுக்கு ரூ.240 என உயர்ந்தது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதும் இல்லை.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 20 முதல் 24-ம் தேதி வரையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,080 என விலை குறைந்தது. கடந்த சனிக்கிழமை அன்று பவுனுக்கு ரூ.800 என தங்கம் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.27) கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,230-க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,13,840-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,524-க்கும், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,870-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனையாகிறது.

Spread the love