விஜய் சமர்ப்பித்த வேட்பு மனுவில் இடம்பெற்றுள்ள சொத்து விவரங்கள் குறித்து முரண்பாடுகள் இருப்பதாக கூறி முன்பே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்பாக தற்போது புதிய மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் வேட்புமனுத்தாக்கல் செய்த மனுவில், தனது மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.6 கோடி கடன் வழங்கியதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலின் நம்பகத்தன்மை, அதன் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து விளக்கம் தேவை என மனுதாரர் கூறியுள்ளார். எனவே இந்த விவகாரத்தை வருமான வரித்துறை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், 5க்கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்தனர். மேலும், தேர்தலில் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற்றது.
சட்டமன்றத் தேர்தலில், மாநிலத்தின் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக அதிகபட்சமாக 84.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் முதற்கட்ட மற்றும் இறுதித் தரவுகளின் விவரங்கள் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
வில்லிவாக்கத்தில் சம்பவம் செய்யும் தவெக! யாரும் யோசிக்காத வியூகம்!
2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விவரம்
- மொத்த வாக்குப்பதிவு சதவீதம்: 84.69%
- பதிவான மொத்த வாக்குகள்: சுமார் 4.85 கோடி முதல் 4.87 கோடி வரை.
- மொத்த வாக்காளர்கள்: சுமார் 5.73 கோடி பேர்.
குறிப்பாக தேர்தலில் சுமார் 84.69 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது தவெகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இத்தகைய அதிக வாக்குப்பதிவு தமிழக வெற்றிக் கழக அரசியல் வருகைக்குப் பிறகே ஏற்பட்டதாகவும் அதற்கு தாங்களே காரணம் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். அவர்களின் இந்த நம்பிக்கை வெற்றியாகுமா, அல்லது திமுக கூட்டணி கணக்கு சரியாகும் என்பதைக் காலமே தீர்மானிக்கும். மேலும் மே 4 ஆம் தேதி வெளியாகும் முடிவுக்கு அனைவரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
விஜய் தாக்கல் செய்த வேட்புமனு
இதற்கிடையே, விஜய் தாக்கல் செய்த வேட்புமனு குறித்து புதிய சிக்கல் ஒன்று வெளியாகி உள்ளது. சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 32 வயதான வெங்கடேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் அந்த மனுவில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்களை அறிந்து கொள்வது ஒரு வாக்காளராக தனது உரிமை என்றும் வேட்பாளர்கள் முழுமையான மற்றும் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டிய கடமை கொண்டவர்கள்.
குறிப்பாக ஃபார்ம் 26 இல் வழங்கப்படும் தகவல்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அவற்றை மறைப்பது தவறாக குறிப்பிடுவது அல்லது தேர்தல் நடைமுறைக்கு எதிரானதாக கருதப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் விஜய் தன்னை வெளிப்படையானவராக காட்டிக் கொள்ளாவிட்டாலும் தனது வேட்பா மனுவில் குடும்பத்தினரும் தொடர்புடைய நிறுவனங்களும் பெரிய அளவில் கடன் வழங்கியதாக குறிப்பிட்டு இருப்பது பொதுமக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அந்த மனுவில் குறிப்பிட்டார்.
வருமானவரித்துறை விசாரணை நடத்த வேண்டும்..
மேலும் தனது மனைவி சங்கீதாவிற்கு ரூபாய் 12.6 கோடி கடன் வழங்கியதாக கூறியிருப்பது அண்மையில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. மேலும் இந்த பண பரிவர்த்தனைகளின் உண்மை தன்மை நோக்கம் மற்றும் சந்தேகங்கள் எழுகின்றனர் . இதனை தேர்தல் ஆணையமும், வருமானவரித்துறையும் இணைந்து விசாரணை நடத்த வேண்டும் என மனு தாரர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன்பாக விசாரணைக்கு வரவுள்ளது. மேலும் இதே போன்ற கோரிக்கைகளுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது

More Stories
ரயில் பயணிகளின் கவனத்திற்கு..அரக்கோணம்- திருத்தணி ரயில் சேவை: இன்று முதல்21 நாட்களுக்கு ரத்து!
ரயில்களில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பெட்டிகளில் பயணிக்க சலுகை
குழந்தைகளிடம் வாக்கு கேட்ட விஜய் மீது கோவை காவல் ஆணையரிடம் புகார்