சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று பவுனுக்கு ரூ.400 என விலை குறைந்தது. அதே நேரத்தில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தங்கம் விலை மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 மற்றும் பவுனுக்கு ரூ.400 என விலை குறைந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.14,250-க்கும், ஒரு பவுன் ரூ.1,14,000-க்கும் விற்பனை ஆகிறது.
24 காரட் தங்கம் இன்று பவுனுக்கு ரூ.432 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,24,368-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.408 குறைந்து, ஒரு பவுன் ரூ.94,432-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275, ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனை ஆகிறது.

More Stories
களையிழந்த அட்சய திருதியை நகை விற்பனை – காரணம் என்ன?
இந்நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,300-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,14,400-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?