சென்னை: தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட தொழிற்பயிற்சிகளை நடத்தி வரும் நிரந்தர, தற்காலிக அங்கீகாரம் பெற்ற வணிகவியல் பயிலகங்கள் ஜூலை 19-ம் தேதிக்குள் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி கூடுதல் இயக்குநர் (தேர்வுகள்) ஏ.ராஜ்நந்தினி அனுப்பிய சுற்றறிக்கை: நிரந்தர மற்றும் தற்காலிக அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் அனைத்து வணிகவியல் பயிலகங்களும் (தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள்) ஆண்டு அங்கீகார புதுப்பித்தலுக்கு http://tims.tndtegteonline.in என்ற இணைதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பத்தை ஜூலை 19-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.30. நிரந்தர அங்கீகாரம் பெற்ற பயிலகங்களுக்கு புதுப்பிப்பு கட்டணம் ரூ.250 ஆகவும், தற்காலிக அங்கீகாரம் பெற்ற பயிலகங்களுக்கு ரூ.750 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

More Stories
“பெண்களை தவெகவினரிடம் பாதுகாக்கவே மேலும் ஓர் அதிரடிப்படை தேவை” – தினகரன் விமர்சனம்
கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: அரசு முழு விவரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை” – குதிரை பேரம் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்