தனுஷ் – 55 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது பற்றி…
தனுஷ் – 55 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரபல நடிகர் மம்மூட்டி இணைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிக்கும் 55-வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
தனுஷின் சொந்தத் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் இணைவது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் (பிப். 5) பூஜையுடன் தொடங்கியது.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.Advertise with us
மேலும், இதில் நடிகர் மம்மூட்டி இணைவதாகவும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ் நடித்த படங்களில் இந்தப் படமே அதிக பொருட்செலவில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்குப் பின்னர் மாரி செல்வராஜ் மற்றும் தமிழரசன் பச்சமுத்து ஆகியோரின் படங்களில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

More Stories
புரோ கோட் பெயரை மாற்றும் ரவி மோகன்!
வைரலாகும் விஜய் மகன் புகைப்படம்!
‘ஜனநாயகன்’ மறுதணிக்கை ஒத்திவைப்பு: படக்குழு அதிர்ச்சி!