சென்னை: தமிழ்நாட்டில் முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட மூன்று தென்கொரிய வாகன உதிரிபாக நிறுவனங்கள், ஆந்திராவில் ரூ.1,614 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன.
ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் வழங்கும் ஹ்வாஷின் ரூ.850 கோடி, செஷான் ரூ.514 கோடி, ஐவாமெட் ரூ.250 கோடி முதலீடு செய்ய உள்ளன. ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் அமையும் இத்தொழிற்சாலைகள் மூலம் 1,418 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர அமைச்சர் நர லோகேஷின் தென்கொரியப் பயணத்தைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், ஆந்திராவுக்கு முதலீடுகள் சென்றிருப்பது தொழில்துறை வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
மதுபாட்டில்கள் விலை ரூ.10 உயர்வா? – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
பழநி முருகன் கோயிலில் தங்க ரத கட்டணம் ரூ.2,500-ஆக திடீர் உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி