சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தமிழ் ஹாக்கி லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐசிஎஃப் – தயாந்த் வீரன்ஸ் அணிகள் மோதின. இந்த மோதலில் ஐசிஎஃப் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் துஷால் குமார், புருத்வி ஆகியோர் தலா 2 கோல்களும், கிரண் குமார் ஒரு கோலும் அடித்தனர். தயாந்த் வீரன்ஸ் அணி சார்பில் வெற்றிவேல், முகமது கைஃப் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஏஜிஓ 4-3 என்ற கோல் கணக்கில் பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது. ஏஜிஓ அணி தரப்பில் சிரன் மேடப்பா, வீரத்தமிழன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

More Stories
வில்வித்தையில் தங்கம் வென்றார் இந்தியாவின் குங்கும் மொஹோத்: ஆசிய விளையாட்டு போட்டியில் அசத்தல்
குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் @ ஆசிய விளையாட்டு போட்டி
ஆசிய விளையாட்டு : வில்வித்தை ரீகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது