November 20, 2026

ஸ்​டைலால் இணை​யத்தை கலக்கிய 2 வயது சிறுவன்: முழு கல்​விச் செலவை ஏற்ற இருசக்கர வாகன ஷோரூம் உரிமையாளர்

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் யவத்​மால் பகு​தி​யைச் சேர்ந்த ஒரு தம்​பதி கடந்த 9-ம் தேதி, புதிய ‘ஹோண்டா ஆக்​டி​வா’ ஸ்கூட்டரை வாங்க உள்​ளூரில் உள்ள ‘சாய் பாயிண்ட் ஹோண்​டா’ ஷோரூ​முக்கு சென்​றனர். அவர்​கள் தங்​களது 2 வயது மகன் ருத்ரான்ஷ் சிங் தாக்​கூரை​யும் அழைத்​துச் சென்​றிருந்​தனர்.

புதிய ஸ்கூட்​டரை வாங்​கிய பிறகு அந்த தம்​ப​தி, மகன் ருத்ரான்ஷை ஸ்கூட்​டர் முன்பு நிற்க வைத்து புகைப்​படம் எடுத்தனர். அப்​போது அந்​தச் சுட்​டிப் பையன், பெரிய​வர்​களைப் போல கண்​களில் கூலிங் கிளாஸ் அணிந்​து, பேண்ட் பாக்​கெட்​டில் கைகளை விட்​டபடி செம ஸ்டைலாக போஸ் கொடுத்​தான்.

இந்த அழகான தருணத்தை அவனது பெற்​றோர் வீடியோ​வாக எடுத்து இன்​ஸ்​டாகி​ராமில் பதி​விட, அது இணை​யத்​தில் வைரலாக பரவியது. இது​வரை 13.7 கோடிக்​கும் அதி​க​மான பார்வைகளையும், 68 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கமென்ட்களையும் குவித்து இந்த வீடியோ சாதனை படைத்​துள்​து.

சிறு​வனின் அபார புகழைக் கண்டு வியந்​து​போன ‘சாய் பாயிண்ட் ஹோண்​டா’ ஷோரூம் உரிமை​யாளர் திலீப் போபடே பாட்​டீல், ருத்​ரான்​ஷை​யும் அவனது குடும்​பத்​தினரை​யும் தனது ஷோரூ​முக்கு மீண்​டும் வரவழைத்து கவுர​வித்​தார். அத்​துடன் எல்கேஜி முதல் கல்​லூரிப் பட்​டப்​படிப்பு வரை ருத்​ரான்​ஷின் ஒட்டுமொத்த கல்​விச் செலவையும் ஏற்​ப​தாக உறுதியளித்துள்ளார்.

Spread the love