நாளை தவெகவில் இணையவுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் கே. பழனிசாமி தலைமையில், 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலக்கட்டத்தில் அதிமுகவின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் சி. விஜயபாஸ்கர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சிப் பூசல் நிலவியபோது, முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான கே. பழனிசாமி உறுதிணையாக இருந்தவர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் இருந்து வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எனினும், இத்தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு சென்றதையடுத்து, மீண்டும் ஒரு உட்கட்சிப் பூசல் நிலவியது. அப்போது, சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி. விஜயபாஸ்கர் அணியினர் கே. பழனிசாமி எதிராக போர்கொடித்தூக்கினர். தொடர்ந்து, கட்சிக்கட்டுப்பாட்டை மீறி தவெகவுக்கும் ஆதரவளித்திருந்தனர். இந்தசூழலில் தான், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர்களை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கினார் கே. பழனிசாமி. இருந்தாலும், அதிமுக உட்கட்சிப் பூசல் தற்போது சற்று தணிந்திருக்கிறது.

More Stories
‘சமையல் எரிவாயு சிலிண்டர்களை 250% கூடுதல் விலைக்கு விற்பதா?’ – அன்புமணி கண்டனம்
வடபழனி முருகன் கோயிலில் 30 அடி தூரத்தில் இருந்து சுவாமி தரிசனம்: கூட்டத்தைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள்
துச்சேரி பேரவை முற்றுகை – பேச்சுவார்த்தை நடத்த வந்த சபாநாயகருடன் எம்எல்ஏ நேரு வாக்குவாதம்