1. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை
2. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை
3. ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை
4. கல்வி உதவித்தொகை
5. திருமண உதவித்தொகை
6. மகப்பேறு உதவித்தொகை
7. மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்
8. முதியோர் ஓய்வூதியம்
மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற கிறித்துவ இனத்தைச் சார்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயது வரை இருப்பவர்கள். கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள் மற்றும் தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களில் பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோர் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.
மேற்படி, நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதல் ஆகியவற்றை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் www.cwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

More Stories
திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்ற ராஜாசெல்வம்
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் புதுப்பேட்டை பகுதியில் தமிழக வெற்றி கழகம் அலுவலகம் திறப்பு விழா
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் புதுப்பேட்டை பகுதியில் தமிழக வெற்றி கழகம் அலுவலகம் திறப்பு விழா