April 18, 2026

திமுக ஆட்சியில்தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு: இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன் பேச்சு.

திமுக ஆட்சியில்தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு: இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன் பேச்சு. இராசிபுரம்:திமுக ஆட்சி இருந்தால்தான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என ராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளரும்,அமைச்சருமான மா.மதிவேந்தன் இஸ்லாமியரிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் ஜாமியா மஜித், அச்சுக்கட்டி தெருவில் உள்ள தர்காவில் தொழு கைக்கு வந்த இஸ்லாமியர்தாரிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் மா மதிவேந்தன் பேசும்போது: ராசிபுரம் தொகுதிக்கு கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் ஏரா னமான திட்டங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன. குறிப்பாக நீண்ட காலமாக இருந்துவந்த குடிநீர் பிரசனை ரூ.854 கோடியில் காவிரி குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியால் தீர்வு காணப்பட்டு இன்று மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் 140 கோடி மதிப்பீட்டில் போதமலை கெடமலைக்கு சாலை வசதிகளும் , அதிநவீன வசதிகளுடன் கூடிய நாமக்கல் மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனை ராசிபுரம் அருகே கொண்டுவரப்பட்டுள்ளதும் திமுகவின் சாதனை என கூறினார் . இதேபோல் ராசிபுரம் ஆண்டகலூர் கேட்பகுதியில் பெரிய மாநகரங்களில் கொண்டு வரப்படும் மினி டைட்டில் பார்க்அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது . இப்பகுதியைச் சேர்ந்த மின் பொறியாளர்கள் மற்றும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் . தினசரி சந்தை, வணிக வளாகம் , வாரச்சந்தை என அனைத்தும் சீரமைக்கப்பட்டு புதிய பொலிவுடன் திகழ்கிறது. தொடர்ந்து ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் இதுபோல திட்டங்கள் தொடரவும், முதல்வர் அறிவித்த திட்டங்கள் ,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், மீண்டும் திமுகவில் போட்டியிடும் தனக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் .

Spread the love