சென்னை: வந்தவாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பரப்புரைக்குச் சென்றபோது, இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரைத் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தில், இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி தவெக வேட்பாளருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் அரசியல் களத்திற்கு வந்திருக்கும் விஜய், ஏற்கெனவே ஏகப்பட பஞ்சயாத்தில் சிக்கியிருக்கிறார். இப்படி இருக்கையில், அவர் நடப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அவருக்கு புதிய சிக்கலை உருவாக்கியிருக்கிறது. இந்த திரைப்படம் திரைக்கு இன்னும் வரவில்லை. சென்சார் பிரச்சனை காரணமாக திரைக்கு வராமல் இருக்கிறது. ஆனால், ஜனநாயகன் முழு திரைப்படமும் ப்ரீலேன்சர் அசிஸ்டண்ட் விஷ்வல் எடிட்டர் மூலமாக மொத்த படமும் லீக் செய்யப்பட்டது. திரைப்படம் லீக் ஆனதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இது ஒருபுறம் இருக்க.. மறுபுறம், திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகவும், இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாகவும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. காலம் காலமாக திரைப்படங்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகத்தான் சித்தரித்து வருகின்றன. இதற்கு எதிராக எவ்வளவோ குரல்கள் எழுப்பப்பட்டாலும், இன்னும் இந்த நிலைமை மாறவில்லை.

More Stories
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
இனிமேல் கிடையாது.. எடப்பாடி பழனிசாமி ரொம்ப டென்ஷன் ஆகிறார்.. உதயநிதி ஸ்டாலின் முடிவு
“234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” – முதல்வர் ஸ்டாலின்