June 13, 2026

“திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை..” – CPI வீரபாண்டியன்

தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு பேசும் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போது எந்த அரசியல் கூட்டணியிலும் இல்லை என்று மு.வீரபாண்டியன் தெளிவுபடுத்தினார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து முடிவு எடுப்போம் என்றும், திமுக, அதிமுக, தவெக அனைத்தும் ஜனநாயக சக்திகள் என்றாலும், வர்க்க நலனே தங்களின் அடிப்படை அளவுகோல் எனவும் கூறினார்.

கோவையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு, மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், பல்வேறு முக்கிய விவகாரங்கள் மற்றும் கட்சியின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்தார்.

சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்

சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்Pt web

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் பற்றிப் பேசிய வீரபாண்டியன், ஆங்கிலேயர் ஆட்சியில் பின்தங்கியிருந்த இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றவர் நேரு என்றும், ஐந்து ஆண்டுத் திட்டங்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அவர் அடித்தளம் அமைத்து கொடுத்ததே இந்தியாவின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார். நேருவை விட அதிக காலம் பிரதமராக இருந்த மோடியைப் பாராட்டும் தலைவர்கள், நேருவை வசைபாடுவது ஏற்புடையதல்ல என்று அவர் விமர்சித்தார்.

Spread the love