சென்னை: முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப்பட்டிருந்த வலையை சேதப்படுத்தியாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகை கடந்த ஜூலை 6-ம் தேதி தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப்பட்டிருந்த வலையை சேதப்படுத்தியதாக திருப்போரூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்ட இருவர் மீது மாமல்லபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இதயவர்மன் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை போலீஸார் தாக்கல் செய்தனர்.
அப்போது அந்த வீடியோவை பார்த்த நீதிபதி, முன்னாள் எம்எல்ஏ-வாகவும், தற்போதைய ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் உள்ள மனுதாரர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனக்கூறி இதயவர்மன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் 12 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

More Stories
‘என்ன ஆனது உங்கள் வாக்குறுதி?’ – உணவுப் பொருள் விலை உயர்வு குறித்து பிரதமருக்கு காங். கேள்வி
புதுச்சேரியில் ஊதியம், பணி பாதுகாப்பு கோரி போராட்டம்: முடங்கிய பிஆர்டிசி மின்சார பேருந்து சேவை
சென்னையில் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 86,489 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி