August 19, 2026

திருப்பூரில் வீ த லீடர்ஸ் சார்பில் விழிப்புணர்வு பேரணி 

format: 0; filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 13107200;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 323.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?Cloudy, icon:1, weatherInfo:100;temperature: 33;

ஆகஸ்ட் 19 

திருப்பூரில் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த பேரணியை இயற்கை விவசாயியும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சட்டையில்லா சாமியப்பன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.முன்னதாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி, பல்லடம் சாலை, சந்தைப்பேட்டை, தென்னம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குப்பை இல்லாத திருப்பூர், நெகிழி இல்லாத திருப்பூர் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பங்கேற்பாளர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.

Spread the love