September 23, 2026

திருப்பூர்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புங்கந்துறை ஊராட்சி, அடுக்கல்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் கவிதா முத்துசாமி அவர்கள் மதிமுக-வில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் எடப்பாடியாரின் தலைமையை ஏற்று அஇஅதிமுக-வில் இணைந்துள்ளார்கள்.

திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் வேல்குமார் .சாமிநாதன் அவர்கள் கழகத்தில் இணைந்த திருமதி.கவிதா முத்துசாமி அவர்களின் குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் குண்டடம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் குப்புசாமி,ஒன்றிய இணை செயலாளர் .விஜயகுமார் திருப்பாத்தாள், ரங்கபாளையம் ரத்தினசாமி, .துரைசாமி,

திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் திரு. லோகநாதன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் . பழனிசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரேம்குமார், ஒன்றிய பேரவை செயலாளர் .சுரேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Spread the love