சட்டமன்றத் தேர்தலில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிடப் போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது. இதில், திருக்கோவிலூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி விருப்ப மனு அளிக்காதது தெரியவந்துள்ளது.
இதன் மூலம், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், பொன்முடி போட்டியிடப் போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1989-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முதல் 2021 ஆம் ஆண்டு வரை அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்ட பொன்முடி 6 முறை வெற்றி பெற்று, 2 முறை தோல்விகளை சந்தித்தார்.மேலும், 3 முறை திமுகவின் அமைச்சரவையில் முக்கிய துறைகளை கவனித்து வந்த பொன்முடி, சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதால், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.2026 தேர்தலில் போட்டியிட பொன்முடி விருப்ப மனு அளிக்காத நிலையில், அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதியில், அவரது மகன் கௌதம் சிகாமணி விருப்ப மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
வெற்றி பெற்ற நாங்க அமைதியாக இருக்கின்றோம் : முக ஸ்டாலின் -உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கம் – அண்ணாமலை அறிவிப்பு
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த மதிமுக எம்.பி துரை வைகோ