தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு மேல் மதுவிற்பனை ஆகியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நாளை ஏப்ரல் 23ம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கான இந்திய தேர்தல் ஆணையம் கடுமையாக நடைமுறைகள் மற்றும் விதிகளை வெளியிட்டு வந்தது.
3 நாட்கள் டாஸ்மாக் மூட உத்தரவு

அந்த வகையில், சுற்றுலா தளங்கள் மற்றும் விடுதிகளில் தங்க அனுமதி இல்லை. மேலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மொத்தம் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைஇயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 135சி விதிப்படி, வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திற்கு முன்பாக 48 மணி நேரத்திற்கு (அதாவது ஏப்ரல் 21 மாலை 6 மணி முதல்) மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை அல்லது விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை

இந்த காலகட்டத்தில் விடுதிகள், உணவகங்கள், மதுக்கடைகள், கடைகள் மட்டுமின்றி தனியார் இடங்களிலும் பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள அனைத்து இடங்களிலும் மதுபானங்கள் அல்லது போதைப்பொருட்கள் விற்பனை, வழங்கல் மற்றும் பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த கட்டுப்பாடு நடைமுறையில் அமல்படுத்தப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு பாதுக்காப்பு

மேலும் டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு மது பகுதியில் ஏதேனும் தகராறு ஏற்படலாம் என்று தேர்தல் நன்னடத்து விதிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் பாதுகாக்கவும் அசம்பாவிதங்கள் மீதுமின்றி தேர்தல் பாதுகாப்பான முறையில் நடக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் மூன்று நாட்கள் டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
_க்ஷ்வ் க்ஷ்ட்வ்


More Stories
‘தொகுதி மறுவரையறை’ ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் விஜய்க்கு திமுக நிபந்தனை
ஓய்வூதியத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி குறைப்பு – முதல்வர் விளக்கமளிக்க தலைமை செயலக சங்கம் வலியுறுத்தல்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்