April 20, 2026

‘தொண்டர்களால் வந்த சிக்கல்’ விஜய் தலையில் விழுந்த பாட்டில் – கலாய்க்கும் இணையவாசிகள்!

தவெக தொண்டர்கள் விஜய் பார்க்கும் ஆர்வத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கக்கூடிய சூழலில் விஜய் மீதே பாட்டிலை வீசிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் திருச்சி கிழக்கு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை நோக்கி தொண்டர் குளிர்பான பாட்டிலை வீசியபோது அது அவரது தலையில் பட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தற்போது தொடர்ச்சியாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறார். தவெக தேர்தல் வேட்பாளரான விஜய் நேற்றைய தினம் தான் போட்டியிட உள்ள திருச்சி கிழக்கு தொகுதியில் மக்கள் பரப்புரையை நடத்தினார். அப்போது அவர் ரோடு ஷோ நடத்தியபோது தொண்டர்கள் அவர் மீது 7 Up பாட்டிலை வீசினர். அது அவரது தலையில் பட்டு விழுந்ததால் விஜய் உட்பட அவரின் பாதுகாவலர்கள் அனைவரும் பதறினர்.

  

தர்பூசணி வீச்சு

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு ரோட் ஷோ மேற்கொண்ட போது, அவரைக் காண சாலையோரம் நின்ற தொண்டர்களில் ஒருவர் ஒரு முழு தர்பூசணியை பிரச்சார வாகனத்திற்குள் தூக்கிப் போட்டார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்கள் முழுக்க வைரலாக போனது. மேலும் வாகனத்திற்குள் இருந்தவர்கள் மீது ஏதேனும் காயம் ஏற்பட்டதா என்ற கேள்விகளும் எழுந்தன. இந்த சூழலில் தான் நேற்றைய தினம் விஜய் மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்பைடர் மேன் பவுன்சர்கள்

ற்கனவே விஜய்யின் பாதுகாவலர்கள் விஜய் மீது வந்து விழும் மாலை, துண்டுகள், குளிர்பான பாட்டில்களை பிடிக்க ஸ்பைடர் மேன் போல மாறி உள்ளதாக விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. மேலும் ஒருகையில் விஜயை பாதுகாத்துக்கொண்டே மற்றொரு கையில் கேட்ச் பிடிக்கும் பவுன்சர்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

இந்த சூழலில் விஜயின் பாதுகாப்பிற்கு ஊரவிக்கும் விதமாக அவரது தொண்டர்களே செயல்படுவதாகவும் பல விமர்சனங்கள் எழுந்த வண்ணமே இருக்கின்றன. விஜய் மீது இருக்கும் அன்பு காரணமாக அவருடைய தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாலும் பல சமயங்களில் கொஞ்சம் sensible – ஆக நடந்து கொள்ளலாமே என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொண்டர்களால் விஜய்க்கு அவதியா?

தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் மீது பலகட்ட விமர்சனங்கள் இருக்கின்றன.

  • விஜய் வரும்போது சாலை விதிகளை கடைபிடிப்பதில்லை.
  • கரூர் சம்பவத்திற்கு பிறகும் விஜய் கூட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்கின்றனர்.
  • மரங்களின் மீது ஏறி கரண்ட் கம்பங்களின் மீது ஏறி இடையூறு விளைவிக்கின்றனர்.
  • தவெக தொண்டர்கள் இன்னும் அரசியல் படுத்தப்படவில்லை.

பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதே இல்லை குறிப்பாக விஜய் ரோட் ஷோ செல்லும்போது தலைக்கவசம் அணியாமல் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் அவரது வாகனத்தை பின்தொடர்கின்றனர்.

வில்லிவாக்கத்தில் சம்பவம் செய்யும் தவெக! யாரும் யோசிக்காத வியூகம்!
இப்படி பலகட்ட விமர்சனங்கள் தவெக தொண்டர்கள் மீதே இருக்கின்றது.எப்போதும் அரசியல் தலைவர்கள் மீது தான் விமர்சனங்கள் எழும், ஆனால் தவெக -வில்தான் தொண்டர்கள் மீதே விமர்சனங்கள் வலுப்பது தமிழக அரசியலுக்கு புதிது. இந்த சூழலில் தான் ஒரு சில விஜய் தான் தனது தொண்டர்களை அரசியல் படுத்த வேண்டும் எனவும் அவர் தனது சுயலாபத்திற்காக தனது தொண்டர்களை கண்டிக்காமல் வைத்திருப்பதாகவும் கருத்துகள் உலவுகின்றனர்.

Spread the love