November 5, 2026

நாகை-இலங்கை கப்பல் கட்டணம் குறைப்பு!

நாகப்பட்டினம்இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் கட்டணம் ரூ.6,000-லிருந்து ரூ.5,500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் கால சலுகையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் எடுத்துச் செல்லும் லக்கேஜ் எடை 10 கிலோவிலிருந்து 30 கிலோவாகவும், கைப்பை எடை 7 கிலோவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 55,310 பேர் இக்கப்பல் சேவையைப் பயன்படுத்தியுள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love