March 21, 2026

நாமக்கல் கிழக்கு மாவட்ட ஒன்றிய,நகர மற்றும் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டமானது மக்கள் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே ஆர் என் இராஜேஷ்குமார்  தலைமையில் நடைப்பெற்றது.

 இக்கூட்டத்தில் கலந்து கொண்டு
மாண்புமிகு.துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகிற 23.03.2026 அன்று திங்கள் கிழமை மதியம் 02:00 மணி அளவில் ஈரோடு தங்கம் மஹால், பெருந்துறைரோடு, மேட்டுக்கடை திருமண மண்டபத்தில் கலந்துரையாடி தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்வது மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் பணி  குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திரு.விஸ்வநாத், துணை அமைப்பாளர்கள் திரு.இளம்பரிதி, திரு.கலைவாணன், திரு.பிரபாகரன், திரு.கார்த்தி,திரு.ரமேஷ்குமார், மாவட்ட. சார்பு அணி அமைப்பாளர்கள் திரு.பொன்.சித்தார்த்,திரு.ஆனந்த்பாபு, திரு.கிருபாகரன் மற்றும் ஒன்றிய,நகர,பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love