கே.பி.இராமலிங்கம் செய்தியாளர்களை சந்திப்பு.
அப்போது அவர் பேசுகையில் ….
வருகின்ற 12ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி திருச்சி மாநகரின் மாலை 5 மணிக்கு எழுச்சி உரையாற்றுகிறார்.தமிழகத்தில் நடைபெறும் தீய ஆட்சியை அகற்றுவதற்கு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போர்க்களம் பூண்டுள்ளது. அதற்கான போர் முரசு கொட்டுவதற்காக அடுக்கடுக்கான ஆதாரங்களோடு ஏன் இந்த ஆட்சி அகல வேண்டும் என்று வரலாற்று சிறப்புமிக்க உரையை பாரத பிரதமர் ஆற்ற உள்ளார்.
பாஜகவின் மாநில தலைவர், பார்வையாளர், இணை பார்வையாளர் உள்ளிட்டோர் அனைவரும் முன்நின்று ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
சமீபத்தில் நயினார் நாகேந்திரன் ஆதீனத்தை பார்த்து விட்டு வெளியிட்டு இருந்த பதிவிற்கு நான் பதிலிட்டு இருந்தேன். அந்த பதிவில் எந்த விதமான அதிருத்தியும் கிடையாது. ஊடகங்கள் அவற்றை பிரித்து வெளியிடுகிறார்கள்.
தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.பி இராமலிங்கம், கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக சிலர் போகங்களை வெளியிட்டு வருகின்றனர்.நாங்கள் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.தேர்தல் களத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியினரோடு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். எங்களைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியே போதுமானது வந்தால் வரவு வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் வரவேண்டும் என்று நாங்கள் யாரும் கூறவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி பெரும்பான்மை அமைக்கவும்.திமுக கூட்டணியை இப்போது இருக்கிற தேசிய ஜனநாயக கூட்டணி தோற்கடிக்க போதும்.கடைசி நேரத்தில் NDA வில் ஒரு சிலர் வந்து சேரலாம்.
விஜய் ஏற்கனவே ஆட்சிக்கு வரலாம் என்ற எண்ணத்தில் இலவசங்களை எதிர்த்திருக்கலாம். ஆனால் இப்போது ஆட்சிக்கு வர முடியாது என்ற எண்ணத்தில் இலவசங்களை அறிவித்திருக்கலாம். இதுகுறித்து விஜய் இடம்தான் தெளிவு பெற வேண்டும்.
திமுக தலைமையிலான கூட்டணி பலமாக இருப்பதைப் போல பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அது பிரச்சாரமே தவிர அதில் உண்மை இல்லை. ஆனால் ஏற்கனவே கடந்த தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ள வாக்குகளை பார்த்தால் எங்களது கூட்டணியின் வலிமை தெரியும்.இப்போது காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28 இடங்களில் 4 இடம் கூட வெற்றி பெறாது நிலை உள்ளது.எனவே பயத்தில்தான் திமுக கூட்டணி பெரும் பொருட்செலவுடன் அமைக்கப்பட்டுள்ளது.
நான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அபிப்பிராயம் இல்லை. தலைமை என்ன கூறுகிறதோ அதை கடைபிடிப்பேன்.
வரும் காலங்களில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும். அதற்கு நானே முன் உதாரணமாக இருப்பேன் என்றார்.
மேலும் கேள்விகளுக்கு பதில் அளித்த கே.பி. இராமலிங்கம்,
மதுரை மாநாட்டில் விசுவாசத்திற்கு பெயர் போனவர் ஓ.பன்னீர்செல்வன் என திமுக தலைவர் கூறியுள்ளது உண்மைதான். அவர் அதிமுகவை அழிப்பதற்காக திமுகவுடன் விசுவாசமாக இருந்தார் என்பது இப்போது தெரிய வருகிறது. அதிமுகவிற்கு எதிரான ஓ. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாட்டில் திமுகவின் விசுவாசம் பல்வேறு கட்டங்களில் வெளிப்பட்டது.
எல்லோரும் திமுகவின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுகிறோம்.
தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதாக கூறுவதை நாங்கள் வரவேற்கிறோம்.
மாநில அரசு செய்யாத மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது குறித்து பிரதமர் பொதுமக்களிடம் கூறி வருகிறார். வந்தி பாரத் ரயில்கள், அமிர்த பாரதம் ரயில் நிலையங்கள், புதிய வழித்தடங்கள், உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு செய்த திட்டங்களை கூறி வருகிறார். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழக முதல்வர் பல்வேறு தவறான தகவல்களை பொதுமக்களிடம் பேசி வருகிறார். தேர்தலுக்காக தலைவர்கள் வருவது அரசியல் தான். திமுகவும் தன்னுடைய பிரச்சாரத்திற்காக பெரும் பொருட்செலவில் விளம்பரங்கள் செய்து, வருகிறார்கள். இது போன்ற விளம்பரங்களை கடந்த சில மாதங்களில் கொடுக்காமல் தேர்தல் வருகின்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நேரத்தில் செய்து வருகிறார்கள். இது முட்டாள் தனமான வாதமாகும் என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர்
கே பி ராமலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

More Stories
எழும்பூர் நிலையத்தில் நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிக்க மின் ஏலம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு
அலங்காநல்லூர் அருகே குமாரம்
அலங்காநல்லூர் அருகே குமாரம்