இதில் 33 மெட்ரிக் டன் மக்கும் கழிவுகள், மாநகராட்சியில் உள்ள 7 நுண்ணுரம் தயாரிக்கும் மையங்களில், மக்கும் கழிவுகளை அரைத்து 45 நாட்களில் உரமாக்கி, பின்பு காயவைத்து, சலித்து அதனை ஒரு செழிப்பு உரமாக தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு தயார் செய்யப்பட்ட செழிப்பு உரம் பாக்கெட் விற்பனை துவக்க விழா நாமக்கல் உழவர் சந்தையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, உரம் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். செழிப்பு உரம் 1 கிலோ ரூ. 20 விலையில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாளில் 51 கிலோ உரம் விற்பனை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர், மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், ஜான் ராஜா, சுப்பிரமணியன், நந்தினி மற்றும் 21 வது வார்டு கவுன்சிலர் நந்தினிதேவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

More Stories
தேமுதிக சார்பில் கொடியேற்று விழா
பழனிக்கு பெங்களூரில் இருந்து ஆம்னி பஸ்ஸில் 17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல்மூன்று பேர் கைது
பழனியில் உறங்காப் புளியான் கோவிலில் திருவிளக்கு பூஜை, ரவி மனோகரன் எம்எல்ஏ பங்கேற்பு