தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நாக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
மத்தியக்கூட்டுறவு வங்கி சேர்மன் ராஜேஷ்குமார், எம்.பி., விழாவில் கலந்துகொண்டு சிறந்த மகளிர் குழுவினருக்கு மணிமேகலை விருதுகளை வழங்கிப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் 13,179 மகளிர் குழுக்களில் 1,47,511 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு வங்கி கடன் ரூ.3,300 கோடி, சமுதாய முதலீட்டுக் கடன் ரூ.14.80 கோடி, சுழல்நிதி ரூ.2.36 கோடி, வாழ்வாதாரநிதி ரூ.2.79 கோடி, வட்டார வணிக வளமையம் மூலம் ரூ. 2.50 கோடி கடனுதவி என, மொத்தம் 3,322,45 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என கூறினார்

More Stories
உடன்குடியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை,ரெக்கம் ரூ 25 ஆயிரம் கொள்ளை:- மர்ம நபர்கள் கைவரிசை!
திருச்செந்தூர் .மார்.13
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சு.கணபதி தலைமையில் நடைபெற்றது.