July 9, 2026

நாமக்கல் மாவட்டம்

தமிழக காவல்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் புகார்கள் மற்றும் குறைகளுக்கு விரைவாகவும் திறம்படவும் தீர்வு காணும் நோக்கில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் நடத்தப்பட்டு வருகிறது.

🎯 அதன்படி, இன்று (08.07.2026) நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு திரு.யாதவ் கிரிஷ் அசோக் இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் திரு. அண்ணாதுரை அவர்கள்.

மேலும் அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் மற்றும் காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை அளித்தனர்.

🎯 பெறப்பட்ட அனைத்து மனுக்களும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, அவற்றின் மீது விரைவாகவும் திறம்படவும் நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கச் செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love