சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாமக்கல் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (25.06.2026) போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. யாதவ் கிரிஷ் அசோக், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாணவர்கள், மாணவிகள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் பங்கேற்று, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மேலும், போதைப்பொருட்களின் தீமைகள், இளைஞர்களின் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
26-06-2026
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் மழை வேண்டி “சக்கரத்தாழ்வார் ஜெயந்தி யாகம்”
பழனி சண்முக நதியில் ஆய்வு செய்தார்