தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், தேவதானபட்டி பேரூராட்சியில்
வசித்து வரும் முருகன் என்பவர் கடந்த 03.12.2025 அன்று மனுதாரரின் தந்தை அதன் பின்னர் மனுதாரரும் கடந்த 85 ஆண்டுகளாக
அனுபவத்திலிருந்து வந்து காலி இடமாக உள்ள இடத்திற்கு தவறுதலாக மூன்றாம் நபரின் பெயர்களில் வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பினை ரத்து செய்து தருமாறு
தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அதனடிப்படையில் நிரந்தர மக்கள் நீதிமன்றம்,மாவட்ட நீதிபதி ஏ.கே.கே ரஜினி பெரியகுளம் மின்சார வாரிய செயற்பொறியாளர், தேவதானப்பட்டி உதவி மின்பொறியாளர் ஆகியோரிடம் மனுவில்
குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கான மின் இணைப்பு குறித்த ஆவணங்கள் எதுவும்
இல்லாத காரணத்தினால் தவறுதலாக வழங்கப்பட்ட மின் இணைப்பினை துண்டிப்பு செய்யுமாறும் இனி வருங்காலங்களில் காலத்தில் மின்சார வாரிய விதிமுறைகளை
கடைபிடித்து உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு மின் இணைப்பு வழங்குமாறும்
துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உத்தரவு நிறைவேற்றப்பட்டு முழு
அறிக்கையை புகைப்படத்துடன் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது.இந்த உத்தரவின் அடிப்படையில் 26-02-2026ம் தேதி பெரியகுளம் மின்சார வாரிய செயற்பொறியாளர், தேவதானப்பட்டி
உதவி மின்பொறியாளர் மற்றும் துறை சார்ந்த ஊழியர்கள் அறிக்கையை
சமர்பித்தார்.

More Stories
‘ஓபிஎஸ் எழுதியுள்ள துரோக வரலாற்றை மக்கள் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை’ – கவுதமி
உடல் உறுப்புகளை தானம் வழங்கிய கோவை சிறுமி வெண்பாவின் குடும்பத்துக்கு முதல்வர் நேரில் ஆறுதல்!
விபத்துக்களை தடுக்க திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் யாகம் செய்த அதிகாரிகள்!