July 24, 2026

படத்துக்கும், போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை – ஜே.சி.டி.பிரபாகர்

த.வெ.க முதல் பட்ஜெட் – மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு வருமா?

த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பல்வேறு துறைகளின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். த.வெ.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போன்று மகளிர் உரிமையைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்த பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக முதல்வர் சிவகுமாரை சந்திக்கும் முதலமைச்சர் விஜய்

கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. கர்நாடகாவில் ஜூ, ஜூலையில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு தேவையான நீரை திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நதி நீர் பங்கீடு, மேகதாது அணை பற்றி வரும் 3-ஆம் தேதி கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து தமிழக முதலமைச்சர் விஜய் பேச உள்ளதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பார்த்த முடிவு எட்டப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Spread the love