
வடிவேல், மாசி
செங்கல்பட்டு: பத்மஸ்ரீ விருது பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 2 பாம்பு பிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பள்ளியில் வேலைக்கான ஆணையை ஆட்சியர் சினேகா நேற்று வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகே சென்னேரி கிராமத்தில் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல், மாசி ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர். இவர்கள் விலங்குகள் நல பிரிவில் பத்மஸ்ரீ விருதைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் அபாயகரமான மற்றும் விஷம் கொண்ட பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பயணித்து கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடித்து சாதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வடிவேல் மகன் சுரேஷ், மாசி மகன் தங்கராசு ஆகியோருக்கு அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் வண்டலூர் அருகேயுள்ள குமிழி அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தோட்டப் பராமரிப்பாளர் மற்றும் இரவு காவலர் பணி தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளியில் பணி புரிவதற்கான நியமன ஆணையை ஆட்சியர் சினேகா நேற்று வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ் குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தர், அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

More Stories
டெல்லி: தலைநகர் டெல்லியில, ஆறு நாள் ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அயோத்தி ராமர் கோயிலால் பொருளாதார மறுமலர்ச்சி: 2024-ல் 11 கோடியாக உயர்ந்த பக்தர்கள் எண்ணிக்கை
மகளிர், சிறார் நல நிதி பட்ஜெட்டில் 11.55% உயர்வு