July 4, 2026

பரந்தூர் விமான நிலையப் பணிகள் நிறுத்தத்தால் 30% வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழில்!

காஞ்சிபுரம்: பரந்​தூர் பன்​னாட்டு விமான நிலை​யப் பணி​கள் தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டாலும், விமான நிலை​யம் அமைய உள்ள 13 கிராமங்​களில் நிலம் விற்க, வாங்க இன்​னும் தடை நீடிப்​ப​தாக அப்​பகுதி மக்​கள் தெரிவிக்​கின்​றனர். இத்​திட்​டத்தை முழு​மை​யாக ரத்து செய்து அரசாணை வெளி​யிடு​வதுடன், நிலம் விற்க, வாங்க உள்ள தடைகளை நீக்க வேண்​டும் என்​றும் வலி​யுறுத்​துகின்​றனர்.

காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூரில் ரூ.27,400 கோடி மதிப்​பில், சுமார் 5,746 ஏக்​கர் பரப்​பள​வில் புதிய பசுமை வழிப்பன்​னாட்டு விமான நிலை​யம் அமைக்க முந்​தைய திமுக அரசும், மத்​திய அரசும் திட்​ட​மிட்​டிருந்​தன.

இதற்​காக ஏகனாபுரம் உட்பட 13 கிராமங்​களில் உள்ள விவ​சாய விளை நிலங்​கள், நீர்​நிலைகள் மற்​றும் குடி​யிருப்​பு​களை கையகப்​படுத்​தும் பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வந்​தன.

குறிப்​பாக ஏகனாபுரம் கிராமம் மொத்​த​மாக இத்​திட்​டத்​துக்​காக குறி வைக்​கப்​பட்​ட​தால் தங்​களின் வாழ்​வா​தா​ர​மும் கிராம​மும் முற்​றி​லும் அழிந்​து​விடும் என்று அஞ்​சி, அப்​பகுதி மக்​கள் கடந்த 1,400 நாட்​களுக்​கும் மேலாகத் தொடர் போராட்​டங்​களை நடத்​தினர்.

இந்​நிலை​யில், தமிழக வெற்​றிக் கழகத்​தின் தலை​வர் விஜய் தமிழக முதல்​வ​ராகப் பொறுப்​பேற்ற பிறகு, இத்​திட்​டத்​துக்​கான நிலம் கையகப்​படுத்​தும் பணி​கள் நிறுத்தி வைக்​கப்​பட்​டன.

அதற்​காக உரு​வாக்​கப்​பட்​டிருந்த சிறப்பு மாவட்ட வரு​வாய் அலு​வல​கங்​களி​லும் விமான நிலை​யத் திட்​டத்​துக்​கான நில அளவை போன்ற களப்​பணி​கள் நிறுத்​தப்​பட்​டு, தற்​போது நிர்​வாக ரீதியி​லான அலு​வல​கப் பணி​கள் மற்​றும் ஆவணப் பரிசீலனை​கள் மட்​டுமே நடந்து வரு​கின்​றன.

புல் முளைத்த நிலையில் காணப்படும். ரியல் எஸ்டேட் தொழிலுக்காக உருவாக்கப்பட்ட இடங்கள்.

தற்​போது வரை சுமார் 1,700 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. நிலம் கையகப்​படுத்​தும் பணி​கள் நிறுத்​தப்​பட்​ட​தால் ஏகனாபுரம் மற்​றும் சுற்​று​வட்​டார பகுதி விவ​சா​யிகள் மகிழ்ச்சி அடைந்​தனர். போராட்​டம் எது​வும் நடை​பெறாத​தால் புறக்​காவல் நிலை​யங்​கள் கூட மூடி வைக்​கப்​பட்​டுள்​ளன.

ஆனாலும், இப்​பகு​தி​யில் நிலம் வாங்க, விற்க உள்ள தடைகள் இன்​னும் விலக்​கப்​பட​வில்லை. இதுகுறித்து, பரந்​தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்​டக் குழு​வின் செய்தி தொடர்​பாளர் ஜனார்த்​தனனிடம் கேட்​ட​போது, “தமிழக வெற்​றிக் கழக அரசு பொறுப்​பேற்ற பிறகு பரந்தூர் விமான நிலை​யத் திட்​டப் பணி​கள் அனைத்​தும் தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது எங்​களுக்​குப் பெரு​மகிழ்ச்சி அளிக்​கிறது.

இதே​போல், இத்​திட்​டத்தை முற்​றி​லும் ரத்து செய்து முறை​யான அரசாணை வெளி​யிட்​டால் மக்​கள் இன்​னும் மகிழ்ச்சி அடை​வார்​கள்” என்​றார். விமான நிலை​யத் திட்ட அறி​விப்பு வெளி​யா​வதற்கு முன்பு பரந்​தூர் மற்​றும் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் உள்ள கிராமங்​களில் ஒரு சென்ட் நிலம் வெறும் ரூ.5,000-க்கு மட்​டுமே விற்​கப்​பட்​டது.

ஆனால், திட்​டம் உறு​தி​யானவுடன் வெளி​மாவட்ட முதலீட்​டாளர்​கள், ரியல் எஸ்​டேட் நிறு​வனங்​கள் நிலத்தை வாங்​கிக் குவித்​த​தால் நிலத்​தின் மதிப்பு ஒரு சென்ட் ரூ.5 லட்​சம் வரை எகிறியது. அரசு தரப்​பிலேயே நில இழப்​பீட்​டுத் தொகை​யாக பரந்​தூரில் ரூ.68 ஆயிர​மும், ஏகனாபுரத்​தில் ரூ.60 ஆயிர​மும் விலை நிர்​ணயிக்​கப்​பட்​டது.

ஆனால், தற்​போது ஆட்சி மாற்​றத்​துக்​குப் பின் இத்​திட்​டம் கைவிடப்பட வாய்ப்​புள்​ள​தாகப் பரவும் தகவல்​களால், ரியல் எஸ்​டேட் துறை​யில் நிலத்​

தின் மதிப்பு 30 சதவீதம் வரை சரிந்​துள்​ளது. விலை சரிந்​தா​லும் முதலீட்​டாளர்​கள் நிலங்​களை வாங்​கத் தயக்​கம் காட்​டு​கின்​றனர்.

இத்​திட்​டம் முழு​மை​யாக ரத்து செய்​யப்​பட்டு அரசாணை வெளி​யா​னால், நில மதிப்பு மேலும் 50 சதவீதம் வீழ்ச்சி அடைய​லாம் என்ற அச்​சம் பலரிடம் உள்​ளது. இதனால் ரியல் எஸ்​டேட் தொழில் கடும் வீழ்ச்​சி​யைச் சந்​தித்​துள்​ளது.

இத்​திட்​டத்தை முதன்​மைப்​படுத்தி பரந்​தூர் வழி​யாகச் செல்​லும் வகை​யில் சென்னை – பெங்​களூர் விரைவு வழிச்​சாலை உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. ஏற்​கெனவே காஞ்​சிபுரம் வழி​யாக 6 வழிச்​சாலை பயன்​பாட்​டில் இருக்​கும்​போதே இந்தக் கூடு​தல் விரைவுச் சாலை அமைக்​கப்​பட்​டது.

மேலும், இந்த விமான நிலை​யத்​துக்கு வருபவர்​கள் காஞ்​சிபுரம் வழி​யாக வந்​த​வாசி, வெள்​ளிமேடுப்​பேட்டை சென்​று, அங்​கிருந்து நேரடி​யாக கூட்​டேரிப்​பட்டு வழி​யாகத் தென்​மாநிலங்​களுக்கு எளி​தாகச் செல்​லும் வகை​யில் சாலை உள்​கட்​டமைப்​பு​கள் திட்​ட​மிடப்​பட்​டன. அது​மட்​டுமின்​றி, பூந்​தமல்லி வரை இருந்த மெட்ரோ ரயில் திட்​ட​மும் பரந்​தூரை மையப்​படுத்தி காஞ்​சிபுரம் வரை நீட்​டிக்க ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

இத்​திட்​டத்​தின் தற்​போதைய நிலை குறித்து சில அரசு உயர் அலு​வலர்​கள் கூறும்​போது, “வி​மான நிலை​யம் நிறுத்​தப்​பட்​டால், இவ்​வளவு கோடி மதிப்​பீட்​டில் உரு​வாக்​கப்​பட்ட சென்னை – பெங்​களூர் விரைவுச் சாலை மற்​றும் உள்​கட்​டமைப்​பு​களின் பயன்​பாடு என்​ன​வாகும்? காஞ்​சிபுரம் வரையி​லான மெட்ரோ ரயில் திட்​டத்​தின் நிலை என்​ன?” என்று கேள்வி எழுப்​பு​கின்​றனர்.

எனவே, பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டம் கைவிடப்​பட்​டாலும், காஞ்​சிபுரம் மாவட்​டத்​தின் ஒட்​டுமொத்த போக்​கு​வரத்து மற்​றும் வணிக வளர்ச்​சி​யைத் தொலைநோக்​குப் பார்​வையோடு அணுகி, இந்த மெட்ரோ ரயில் மற்​றும் சாலை உள்​கட்​டமைப்​புத் திட்​டங்​களை அரசு எக்​காரணம் கொண்​டும்​ நிறுத்​தாமல்​ தொடர்ந்​து செயல்​படுத்​த வேண்​டும்​ என்​று காஞ்​சிபுரம்​ மாவட்​ட மக்​கள்​ கோரிக்​கை வைக்​கின்​றனர்​.

Spread the love