July 3, 2026

பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்  முன்னாள் நீதி அரசர் பள்ளி ஆண்டு விழாவில் பேச்சு 

சோழவந்தான் மார்ச் 30

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28ஆம் ஆண்டு விழா நடைபெற்றது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி முன்னாள் நீதி அரசர் ஏ ஆர் ரவி பேசும்போது 

பள்ளி மாணவர்கள் அதிக ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போலவே விளையாட்டு துறைக்கும் முக்கியத்துவம் அளித்து உடல் நலத்தை பேணி காக்க வேண்டும் மாணவ மாணவிகளின் கலைத்திறனை ஊக்குவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பள்ளி தாளாளர் எம் வி எம் மருது பாண்டியன் தலைமை வகித்தார் எம் வி எம் குழும சேர்மன் மணி முத்தையா பள்ளி நிர்வாகி எம். வள்ளி மயில் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் தீபா ராகினி வரவேற்றார். விழாவில் திமுக பொதுக்குழு உறுப்பினர் சோழவந்தான் கிரி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம் கே முருகேசன் சோழவந்தான் நகை அடகு கடை சங்க நிர்வாகிகள் காளீஸ்வரன் இருளப்பன் என்ற ராஜா பேரூராட்சி கவுன்சிலர்கள் தொழிலதிபர்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் மாணவ மாணவியர் பெற்றோர் ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Spread the love