சோழவந்தான் மார்ச் 30
மதுரை மாவட்டம் சோழவந்தான் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முன்தினம் பாலமேடு அருகே உள்ள மஞ்சமலை கோவிலில் சாமி தரிசனம் செய்து அங்கிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் வழிநெடுக பல்வேறு கிராமங்களில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் அதனைத் தொடர்ந்து நேற்று காலை சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டார் அதனைத் தொடர்ந்து குருவித்துறை அருள்மிகு சித்திரரத வல்லப பெருமாள் குரு பகவான் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தார் இதனைத் தொடர்ந்து குருவி துறையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவட்சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்த பொது மக்களிடம் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் இதனை அடுத்து ஐயப்பன் நாயக்கன்பட்டி கண்ணுடையாள்புரம் மன்னாடிமங்கலம் முள்ளிப்பள்ளம் தென்கரை ஆகிய பகுதிகளில் தனது தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டதுடன் தன்னை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் சோழவந்தான் தொகுதியில் நிறைவேற்ற உள்ள திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறினார் இந்த நிகழ்ச்சிகளில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் பேரூர் செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன் வாடிப்பட்டி டாக்டர் அசோக் குமார் மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

More Stories
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலை தடுப்பு மீது கார் மோதி 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாப உயிரிழப்பு
தமிழக ஆளுநர் நாளை சென்னை வருகை: அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 19 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடப்பட்ட புகைப்படம்