July 28, 2026

பழனியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

 மோசடி பத்திரப்பதிவு கண்டித்து

 பழனி ஜூலை 27 

பழனி மயில் ரவுண்டானா அருகில், இந்து முன்னணி சார்பில், பழனி தண்டபாணி சுவாமி நிலத்தை  ரூபாய் இரண்டு கோடிக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்ததை கண்டித்தும், அதற்கு சிபிஐ விசாரணை நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா  சுப்ரமணியம் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது: பழனி தண்டபாணி சுவாமி நிலம் 1988ல் எதற்காக  வழங்கப்பட்டதோ அதற்காக பயன்படுத்தப்பட வேண்டும். இதில் மாநிலச் செயலாளர் முத்துக்குமார், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெகன், மதுரை கோட்டச் செயலாளர் பாலன், மாவட்டத் துணைத் தலைவர் வெங்கடேஷ், மாவட்ட செயலாளர்கள் ராஜா, கதிரவன் சிவா அஜித் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்

2 Attachments  •  Scanned by Gmail

Spread the love