September 19, 2026

பழனியில் சிவசேனா இந்து மக்கள் கட்சி இந்து தமிழர் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது 

பழனி செப்டம்பர் 19  

பழனியில் நேற்று இரவு சிவசேனா மற்றும் இந்து மக்கள் கட்சி இந்து தமிழர் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க சென்ற விநாயகர் சிலை ஊர்வலம் முடிவில் பழனி சண்முக நதியை  அடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் சரக போலீஸ் டி ஐ ஜி சசி மோகன்  திண்டுக்கல் போலீஸ் எஸ்பி ஜெயக்குமார் பழனி போலீஸ் டிஎஸ்பி தேவராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

Spread the love