
பழனி ஜனவரி 30
பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் பழனி ஆண்டவர் ஆண்கள் கல்லூரி மற்றும் பெண்கள் கலைக் கல்லூரியில் படிக்கும், 3ஆம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு, அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நேற்று பழனி ஆண்டவர் ஆண்கள் கலை கல்லூரியில் நடைபெற்றது. பழனி ஆர்டிஓ கண்ணன் தலைமை தாங்கினார். கோவில் துணை ஆணையர் வெங்கடேசன், தாசில்தார் பிரசன்னா, ஆண்கள் கல்லூரி முதல்வர் ரவிசங்கர், பெண்கள் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தில்குமார் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 1936 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது. மாணவ மாணவிகள் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட மடிக்கணினிகளை நல்ல முறையில் பயன்படுத்தி, நல்ல நிலைக்கு வர வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் அஸ்வின் பிரபாகரன், நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, திமுக நகர செயலாளர் வேலுமணி, ஒன்றிய செயலாளர்கள் சாமிநாதன், சௌந்தரபாண்டியன், கவுன்சிலர் காளீஸ்வரி பாஸ்கரன், நகர இளைஞரணி செயலாளர் லோகநாதன், முன்னாள் நகர் மன்ற தலைவர் எஸ் கே கே ஹக்கிம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

More Stories
தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்
தமிழகம் வரும் பிரதமர் அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு
‘குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை’ – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு