அண்ணாமலை பேசினார்
பழனி பிப்ரவரி 11
பழனியை தலைநகரமாகக் கொண்டு 30 நாட்களுக்குள் தனி மாவட்டமாக, திமுக அரசு அறிவிக்க வேண்டும்.
பழனி பஸ் நிலையம் மயில் ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனியை தலைமை இடமாகக் கொண்டு பழனியை மாவட்டமாக அறிவிக்க கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் என்.கனகராஜ் தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் திருமலைசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, நகர தலைவர் ஆனந்தகுமார், பழனி கிழக்கு தலைவர் கே.பிரகாஷ், பழனி மேற்குத் தலைவர் கவிதாசிவகுமார், மாவட்ட பொருளாளர் பி.ஆனந்த்பெருமாள், மாவட்டத் துணைத் தலைவர்கள் மதன்குமார், எஸ் ரஞ்சிதம், மாவட்ட செயலாளர்கள் ஜெய்கணேஷ், ஸ்ரீகலா, பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஜெயராமன், பூவேந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் ஆர்ப்பாட்ட உரையை, முன்னாள் பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே அண்ணாமலை பேசியதாவது: பாரதிய ஜனதா கட்சியின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு, 30 நாட்களுக்குள் பழனியை தனி மாவட்டமாக திமுக அரசு அறிவிக்கும் என நம்பிக்கை உள்ளது. பழனியும் பழனிவாழ் மக்களும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய வேண்டும். வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். என்றால் பழனியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இல்லை எனில், தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும், பழனியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும். பழனி நகரம் கோவில் நகரமாக இல்லை. குப்பை நகரமாக உள்ளது. 50,000 முதல் 3 லட்சம் பேர் வசிக்கும் தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தியாவிலேயே பழனி 585 வது இடத்தில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களும் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். நன்மை எதுவும் செய்யவில்லை. முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டிஎன்பிஎஸ்சி யில் செய்த குளறுபடியால், குரூப் 2 தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிவிட்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வு நிறுத்தி வைத்துள்ளனர். அமைச்சர் கே என் நேரு 888 கோடி வாங்கிக் கொண்டு, அரசு துறையில் பணி வழங்கி உள்ளதாக ஆழாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. பழனி முருகன் கோவிலில் நடப்பது எதுவுமே வெளிப்படையாக தெரிவதில்லை. உண்டியல் வருவாய் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ரு ரெண்டு கோடி என்று கூறுவதைத் தவிர, வேறு எதுவும் கூறுவதில்லை. ஆண்டுக்கு 220 கோடி வருமானம் வரும் பழனியில் பக்தர்களுக்கு எவ்வித வசதியும் செய்து தருவதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த நாலரை ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. ஆனால் முதலமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் போன்றவர்கள் யாருமே அங்கு போய் எட்டி பார்க்கவில்லை. பழனியில் சித்த மருத்துவ கல்லூரி அமைப்பதாக கூறிய, திமுக அரசு ஒரு செங்கலை கூட நகர்த்தி வைக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார். இதில் அமமுக நல்லசாமி, வீரக்குமார், விஸ்வ ஹிந்து பரிஷத் செந்தில்ஜி, இந்து முன்னணி பாலன், தென்னிந்திய பார்வேர்டு பிளாக் சபரி, தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் சண்முகநாதன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வைரமுத்து, அதிமுக கவுன்சிலர் நடராஜன் ஆகியோர் உட்பட ஏராளமான ஒரு பங்கேற்றனர்

More Stories
ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்
“ரூ.1500 கோடி லஞ்சம்… மனமகிழ் மன்ற உரிமம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை” – அன்புமணி
கடல் நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணி: அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு