September 1, 2026

பழனி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

 பழனி செப்டம்பர் 1 

பழனி அருகே உள்ளது பாலசமுத்திரம். இங்கு அகோபில வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில்  பழனி முருகன் கோவிலில் உப கோவில் ஆகும்.  இங்கு ஆவணி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி, கடந்த மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கடந்த 29ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் வீற்றிருந்தார். பின்பு திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோவிந்தா கோவிந்தா என்றபடி சென்றனர். இதில் பழனி கோயில் நிர்வாக அதிகாரி பொறுப்பு வெங்கடேசன், கண்காணிப்பாளர்கள் அழகர்சாமி, பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, அரிமா பிரமுகர் சுந்தரம் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Spread the love