February 7, 2026

பழனி தைப்பூசம்   : பிப். 1ல் திரு தேரோட்டம் 

 பழனி தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு, பிப்ரவரி 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு மேல் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவிழாவையொட்டி 31ஆம் தேதி (சனிக்கிழமை) பெரியநாயகி அம்மன் கோவிலில் இரவு 7 மணிக்கு மேல், 8 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் முருகன் வள்ளி தெய்வானை ஆகியோரின் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்பு மனக்கோளத்தில் இரவு 9 மணிக்கு மேல் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளி ரதத்தில், ரத வீதிகளில் திருஉலா வரும் காட்சி நடைபெறுகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் சண்முக நதியில் முருகப்பெருமான் தோலுக்கு இனியாளில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்பு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 11:15 மணிக்கு மேல் 12 மணிக்குள் தேர் ஏற்றம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மேல் தைப்பூசம் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் கே எம் சுப்பிரமணியம், அறங்காவலர்கள் தனசேகர், சு பாலசுப்பிரமணி, ஜி ஆர் பாலசுப்பிரமணியம், அன்னபூரணி ஆகியோர் செய்து வருகின்றனர்

Spread the love