பழனியில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய மாவட்ட தலைவர் சாமிநாதன் அவர்களின் அறிமுக கூட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அவருக்கு காமராஜ் தேசிய பேரவை சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நகரத் தலைவர் முத்துவிஜயன், மாவட்டத் துணைத் தலைவர் முருகானந்தம், மண்டல தலைவர் வீரமணி, காமராஜ் தேசிய பேரவை பாப்புச்சாமி, முன்னாள் நகர்
மன்ற உறுப்பினர் சுந்தர், நகர இளைஞரணி தலைவர் பாலகுமார், சிறுபான்மை பிரிவு முகமது அலி, ராமநாத கிருஷ்ணன், நகர் மன்ற உறுப்பினர் பத்மினி முருகானந்தம், நகர் வட்டார சார்பில் திரளாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பழனி to ஈரோடு ரயில்வே திட்டத்தையும், மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை எந்த மாற்றமும் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
31.01.26

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது